ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியா மட்டுமல்ல, ஆகஸ்ட் 15 சுதந்திரமடைந்த 5 நாடுகள்

இந்தியா மட்டுமல்ல, ஆகஸ்ட் 15 சுதந்திரமடைந்த 5 நாடுகள்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திரத்தை தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

பஹ்ரைன் : மக்களிடம் ஐ.நா சபை வாக்கெடுப்பு நடத்திய பின் ஆகஸ்ட் 15, 1971-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பஹ்ரைன் விடுவிக்கப்பட்டது. இருப்பினும், முன்னாள் ஆட்சியாளர் ஈசா பின் சல்மான் அல் கலிஃபா அரியணை ஏறிய நாளுக்கு இணையாக டிசம்பர் 16 அன்று பஹ்ரைன் அதன் தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

லிச்சென்ஸ்டீன் : உலகின் ஆறாவது சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 1866 முதல் ஜெர்மன் பிடியல் இருந்து வந்தது. ஆகஸ்ட் 15, 1940-ம் ஆண்டு இந்த நாடு ஜெர்மனியிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

தெற்கு மற்றும் வட கொரியா : இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஆகஸ்ட் 15, 1945-ல் கொரிய தீபகற்பகத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது.

Also Read : உள்நாட்டு விமான கட்டணம் அதிகரிப்பு - பயணிகள் கவலை

சோவியத் மற்றும் அமெரிக்கா படையினரால் கொரிய தீபகற்பம் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து வட கொரியா மற்றும் தென் கொரியா இரு நாடுகளும் 1947-ல் தங்களது சுதந்திர அரசை நிறுவியது.

காங்கோ குடியரசு : ஆகஸ்ட் 15, 1960-ல் பிரான்ஸ் அரசிடமிருந்து காங்கோ சுதந்திரம் பெற்றது. 1800-களிலிருந்து பிரனாஸ் காங்கோவை தனது பிடியில் வைத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Independence day, News On Instagram