Home /News /national /

ஆகஸ்ட் 15-ல் சுதந்திரமடைந்த மற்ற நாடுகள்.. என்னென்ன தெரியுமா?

ஆகஸ்ட் 15-ல் சுதந்திரமடைந்த மற்ற நாடுகள்.. என்னென்ன தெரியுமா?

தேசிய கொடி

தேசிய கொடி

ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை  நாம் கொண்டாட உள்ளோம். அதே தேதியில் இந்தியா மட்டுமல்லாமல் மேலும் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

    பஹ்ரைன் : மக்களிடம் ஐ.நா சபை வாக்கெடுப்பு நடத்திய பின் ஆகஸ்ட் 15, 1971-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பஹ்ரைன் விடுவிக்கப்பட்டது. இருப்பினும், முன்னாள் ஆட்சியாளர் ஈசா பின் சல்மான் அல் கலிஃபா அரியணை ஏறிய நாளுக்கு இணையாக டிசம்பர் 16 அன்று பஹ்ரைன் அதன் தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

    லிச்சென்ஸ்டீன் :  உலகின் ஆறாவது சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 1866 முதல் ஜெர்மன் பிடியல் இருந்து வந்தது. ஆகஸ்ட் 15, 1940-ம் ஆண்டு இந்த நாடு ஜெர்மனியிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

    தெற்கு மற்றும் வட கொரியா : இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஆகஸ்ட் 15, 1945-ல் கொரிய தீபகற்பகத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது.

    சோவியத் மற்றும் அமெரிக்கா படையினரால் கொரிய தீபகற்பம் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து வட கொரியா மற்றும் தென் கொரியா இரு நாடுகளும் 1947-ல் தங்களது சுதந்திர அரசை நிறுவியது.

    காங்கோ :  ஆகஸ்ட் 15, 1960-ல் பிரான்ஸ் அரசிடமிருந்து காங்கோ சுதந்திரம் பெற்றது. 1800-களிலிருந்து பிரனாஸ் காங்கோவை தனது பிடியில் வைத்திருந்தது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Independence day, India, North korea

    அடுத்த செய்தி