ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா தடுப்பூசிக்கு ஆர்வமில்லை.. வீணாகும் 5 கோடி தடுப்பூசிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசிக்கு ஆர்வமில்லை.. வீணாகும் 5 கோடி தடுப்பூசிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

10 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகி அழிக்கப்பட்ட நிலையில் மேலும் 5 கோடி தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  பெரும் தொற்றான கொரோனாவை எதிர்த்துப் போராடும் வகையில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில் மக்களிடம் ஆர்வம் குறைந்த நிலையில் தாயார் நிலையில் உள்ள 5 கோடி மதிப்பிலான தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  சீனாவில் தொடங்கி உலகில் பெரும் தொற்றாக வலுவெடுத்து பெரும் அளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கொரோனா தெற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிஷ்ல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்டது.

  கோவிஷ்ல்டு தடுப்பூசியை புனே இந்திய சீரம் நிறுவனம் மற்றும் கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனங்கள் உற்பத்தி செய்தனர். நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டது.

  மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் அறிமுகம் செய்யப்பட்டு சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

  Also Read : '"சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது''.. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிபதி ரவீந்திர பட் சொன்னது என்ன?

  இந்த நிலையில் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் குறைந்த நிலையில் இந்திய சீரம் நிறுவனத்தின் 10 கோடி கோவிஷ்ல்டு தடுப்பூசிகளை வீணாகி அழிக்கப்பட்டுள்ளது.

  அதே போல் பாரத் நிறுவனத்தில் 5 கோடி மதிப்பிலான கோவேக்சின் தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Corona, Corona Vaccine, Covaxin, Covishield