எல்லையோர மாவட்டங்களான அசாமில் பாதுகாப்பு படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பிலும் கூடுதல் உஷார் நிலையிலும் பணிபுரிகின்றனர். அவ்வாறு அம்மாநில உளவுத்துறைக்கு சிம்கார்டுகளை விநியோகம் அதிகளவில் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு அசாம் காவல்துறைக்கு கொடுத்துள்ளது. அதன்பேரில் நகோன், மோரிகோன் ஆகிய மாவட்டங்களில் அசாம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை உளவாளிகளுக்கு போலி சிம்கார்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக 5 பேரை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்களின் பெயர்கள் ஆஷிகுல் இஸ்லாம், போடார் உத்தின், மிஜனுர் ரகுமான், வஹிதுஸ் சமான், பஹருல் இஸ்லாம் என அசாம் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 136 சிம்கார்டுகள், விரல் ரோகை ஸ்கேன் கருவி, தொழில்நுட்ப கருவிகள், முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அஷிகுல் இஸ்லாம், 2 IMEI நம்பர்களை கொண்ட தனது செல்போனை பயண்படுத்தி, பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பறிமாறிக்கொண்டது விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்ட ஐவரிடமும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை தேடும் பணியை காவல்துறை முடுக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Crime News, ISI, SIM Card