நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 3-ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4-ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது.
மகாராஷ்ட்ராவில் 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தின் 8 தொகுதிகளிலும், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும், பீகாரில் 5 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தின் 3 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளில் நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில் பீகார் மாநிலத்தின் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கண்ணையா குமார், கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.