ஆகஸ்ட் 16 முதல் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு இடத்தில் 4 ஜி சேவை - மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் 4ஜி சேவை வரும் 16ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 16 முதல் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு இடத்தில் 4 ஜி சேவை - மத்திய அரசு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 11, 2020, 1:01 PM IST
  • Share this:
கடந்தாண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆகஸ்ட் 5ம் தேதி பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அதிவேக 4ஜி இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனால் மாணவர்களின் கல்வி, மருத்துவ வசதிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.

Also read... '#ScrapEIA2020... வேண்டாம் EIA...' வண்ணக்கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த மக்கள்


இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் முக்கிய தேவைகளுக்கு மட்டுமே ஒரு மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் 4ஜி சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அட்டர்ணி ஜெனரல் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார். பாதுகாப்பு கருதி எல்லைப்பகுதியில் இந்த சேவை இருக்காது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading