முகப்பு /செய்தி /இந்தியா / மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகை உடனடியாக தரப்படும்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகை உடனடியாக தரப்படும்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன்

செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன்

48th GST Council Meeting | பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிமெண்ட் மீதான வரிக் குறைப்பு குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை உடனடியாக கொடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 49வது கூட்டம், டெல்லி விஞ்ஞான் பவனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பங்கேற்றார். பென்சில் ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி, 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. குறிச்சொற்கள் கண்காணிப்பு சாதனங்களுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டது. திரவ வெல்லத்தின் மீது ஜிஎஸ்டி, ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பேக்கேஜிங் செய்யப்படும் வெல்லத்திற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர், மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டதாகவும் அந்த தீர்ப்பாயத்துக்கு மாநிலத்தின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்.

கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை உடனடியாக கொடுக்கப்படும் என  தெரிவித்தார். மேலும் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விடுவிப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக 1,201 கோடி ரூபாய் கிடைக்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தொகையை வரும் காலத்தில் வசூலிக்கப்படும் செஸ் வரியில் இருந்து ஈடு செய்யப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிமெண்ட் மீதான வரிக் குறைப்பு குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் வராதது ஒட்டுமொத்த கட்டுமான துறையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, GST council, Minister Palanivel Thiagarajan