கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்தவர் 48 வயதான தீபா. திருமணமாக தீபா இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். கேப் டிரைவரான இவர், தீபாவை அலுவலகத்திற்கு அழைத்து சென்று வீட்டுக்கு கொண்டுவந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இருக்கும் இடையேயான அறிமுகம் நட்பாக மாற, பீமா ராவ் தீபாவின் உறவினர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார்.
இப்படி இருக்க, தீபாவிடம் டிரைவர் பீமா ராவ் தன்னை காதலனாக ஏற்கும்படி சமீப நாள்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தீபா டிரைவர் பீமா ராவை தவிர்க்க தொடங்கியுள்ளார். அவரது மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளுக்கு ரிப்ளை செய்வதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கடைக்கு செல்வதற்கு டிராப் செய்ய பீமா ராவ்வை தீபா அழைத்துள்ளார். அப்போது காரில் பயணித்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் முன்பு போல ஏன் பேசவில்லை என்று ஆத்திரத்துடன் பீமா ராவ் கேட்கவே, இந்த தகராறில் தீபாவை பீமா ராவ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் சடலத்தை பாகலூர் அருகே உள்ள வாய்காலில் வீசியுள்ளார்.
இதையும் படிங்க: இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. பைக் சாகசத்தால் பறிபோன இளம்பெண் உயிர்.. இருவர் கைது
தீபா திடீரென மாயமானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் தந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் டிரைவர் பீமா ராவை விசாரித்த போது தான் உண்மை அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து டிரைவர் பீமா ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Crime News