ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரேக் பிடிக்கல.. அதிவேகத்தில் தடுமாறிய லாரி.. அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.. நெடுஞ்சாலையில் பெரும் விபத்து!

பிரேக் பிடிக்கல.. அதிவேகத்தில் தடுமாறிய லாரி.. அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்.. நெடுஞ்சாலையில் பெரும் விபத்து!

நெடுஞ்சாலை விபத்தில் நொறுங்கிய கார்கள்

நெடுஞ்சாலை விபத்தில் நொறுங்கிய கார்கள்

இந்த சம்பவத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pune (Poona) [Poona] |

  புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் நவலே பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பெரும் சாலை விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்தன.

  புனே- பெங்களூரு இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக் ஒன்று நாவல் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் நிலை தடுமாறியுள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் அருகே இருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  நேற்று இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது, சாலையில் எண்ணெய் கசிந்து வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. இதனால் சாலை வழுக்கி மேலும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

  இதுவரை கிடைத்த தகவலின்படி, 48 வண்டிகள் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

  அந்த இடத்தில் பல வாகனங்கள் சேதமடைந்த நிலையில் புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு படி முடிகி விடப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர், காவல்துறை பணியாளர்கள் மற்றும் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .

  இந்த விபத்தால் மும்பை செல்லும் சாலையில் 2 கிமீ தூரத்துக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  நவலே பாலம் கடந்த சில நாட்களாக விபத்துகளின் முக்கிய இடமாக மாறி வருகிறது. கடந்த வெள்ளியன்று, வெளிவட்ட சாலையில் உள்ள பாலத்தின் அருகே வேகமாக வந்த கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Accident, Road accident