ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது.. 48 சிலிண்டர்கள் பறிமுதல்...

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது.. 48 சிலிண்டர்கள் பறிமுதல்...

அனில் குமார்

அனில் குமார் பெரிய சிலிண்டர்களிலிருந்து, சிறிய சிலிண்டருக்கு ஆக்ஸிஜனை மாற்றி சிறிய சிலிண்டர் ஒன்றை 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Share this:
கொரோனாவின் கோரத்தாண்டவத்தை இந்தியா தற்போது சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலையைக் காட்டிலும் 2ம் அலை பல மடங்கு வேகமாக வீரியத்துடன் பரவி வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 2,000ஐயும் கடந்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் பயங்கர பாதிப்பை சந்தித்து வருகின்றன.

அதிகமான பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏற்கனவே படுக்கை வசதிகள், ஐசியூ, வெண்டிலேண்டர் போன்றவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது உயிர் காப்பதில் முக்கிய பங்காற்றும் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு திடீரென பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் சப்ளையை துரிதப்படுத்தும் நோக்கில் விமானப் படையின் விமானங்களை பயன்படுத்தி வான் வழியாகவும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இப்படியான இக்கட்டான நேரத்தில் ஆக்ஸிஜனை பதுக்கி வியாபாரம் செய்து வந்த நபரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆக்ஸிஜனுக்கு அல்லோல்படும் தலைநகர் டெல்லியில் வியாபார நோக்கில் ஒரு நபர் வீட்டில் பதுக்கு வைத்து சிறிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டரை 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் தாஷ்ராத்புரி பகுதியில் ஒரு வீட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கு வைத்து ஒருவர் வியாபாரம் பார்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அனில் குமார் என்பவரின் வீட்டின் கீழ்தளத்தில் 67 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பக்கவாதத்தால் தற்கொலைக்கு முயன்றவர்.. 900 உயிர்களை காப்பாற்றி ஆக்ஸிஜன் மேன் ஆன கதை


 

அனில் குமார் பெரிய சிலிண்டர்களிலிருந்து, சிறிய சிலிண்டருக்கு ஆக்ஸிஜனை மாற்றி சிறிய சிலிண்டர் ஒன்றை 12,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு தேவையான வாயுக்களை விற்பனை செய்து வரும் அனில் குமாரிடம் முறையான அனுமதியோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனில் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியை பெற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Published by:Arun
First published: