எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேர் கைது... இலங்கை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த வாய்ப்பு..

கோப்புப்படம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

 • Share this:
  நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துள்ளது. இதில், 27 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் எனவும், 20 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இலங்கை கடல் பகுதியில் அந்நாட்டு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியதாக 23 இந்திய படகுகளுக்கு மீன்பிடிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டுள்ளது  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: