ஹோம் /நியூஸ் /இந்தியா /

விமானநிலையத்தில் ரூ.47 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிப்பட்டது... இரு வெளிநாட்டினர் கைது

விமானநிலையத்தில் ரூ.47 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிப்பட்டது... இரு வெளிநாட்டினர் கைது

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட ரூ.47 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது தென் ஆப்ரிக்காவின் ஜெகனஸ்பெர்க் நகரில் இருந்து கென்யா வழியாக வந்த KQ210 விமானத்தில் பயணம் செய்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அவர் கொண்டுவந்த  ஹேண்ட் பேக்கில்  போதை 4.47 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

அதேபோல், எத்தியோப்பிய நாட்டு விமானமான ET-460 இல் வந்த பயணி ஒருவரின் பையில் சந்தேகம் அளிக்கும் வகையில் அதிக பட்டன்கள் இருந்தன. அந்த பையில் சோதனை செய்தபோது பைகளிலும், அதில் இருந்த குர்த்தா உடை பட்டன்களிலும் கொக்கைன் போதைப்பொருள் ரகசியமாக கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எத்தியோப்பியா பயணியிடம் இருந்து 1.569 கிலோ எடையுள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.47 கோடியாகும்.

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Mumbai Airport, Smuggling