முகப்பு /செய்தி /இந்தியா / டியூஷன் படிக்க வந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்.. ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு

டியூஷன் படிக்க வந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் சீண்டல்.. ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தன்னிடம் டியூஷன் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

டியூஷன் படிக்க வந்த 10ஆம் வகுப்பு மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேதா பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் கோவிந்த் பாடேல். ஆசிரியரான இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு ட்யூஷன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரிடம் படிக்கும் 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவிடம் தொடப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மாணவன் டியூஷனுக்கு வரும் போதெல்லாம், அவனிடம் ஆபாச சைகைகளை காட்டியும், தவறான சீண்டகளை செய்தும் கோவிந்த் பாடேல் நடந்து கொண்டதாக மாணவர் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் இது போன்ற கொடுமைகளை செய்ததோடு மட்டுமல்லாது, மாணவரின் செல்போனுக்கு போன் செய்து அபாச வார்த்தைகளில் பேசியதாகவும் மாணவர் புகார் அளித்துள்ளார். இதனால், பொறுக்க முடியாத மாணவர் தந்தையிடம் முறையிடவே அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் ஆசிரியர் கோவிந்த் பாடேல் மீது போக்சோ, எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆசிரியர் மேலும் பல மாணவர்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

First published:

Tags: Crime News, Gujarat, POCSO case, Sexual abuse