கடவுள் பெயரால் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர்!

மார்ச் 25-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியின் தந்தையிடம் சென்று உன் மகளின் கனவில் துறவி வந்துள்ளார். அவர், உன் மகள் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 19, 2019, 5:17 PM IST
கடவுள் பெயரால் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர்!
கோப்புப் படம்
news18
Updated: April 19, 2019, 5:17 PM IST
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் 17 வயது மனைவியை மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 45 வயதுடையவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகிலுள்ள டியோனர் பகுதி காவல்நிலையத்தில், 53 வயதுடையவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘17 வயதுடைய எனது மகளை 45 வயது நபர் திருமணம் செய்து  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ், குற்றம்சாட்டப்பட்டவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரை தேடி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விவரித்த காவல்துறையினர், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், குற்றம்சாட்டப்பட்டவரும் ஒன்றாக வேலை செய்துள்ளனர். இருவரும், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள தர்காவிலுள்ள துறவியின் பக்தர்களாக இருந்துள்ளனர். 2017-ம் ஆண்டு முதல், குற்றம் சாட்டப்பட்டவர், மும்பைக்கு அருகிலுள்ள கோவாண்டி பகுதியிலுள்ள புகார் அளித்தவரின் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வருகிறார். மார்ச் 25-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியின் தந்தையிடம் சென்று உன் மகளின் கனவில் துறவி வந்துள்ளார்.

அவர், உன் மகள் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு, சிறுமியின் தந்தை, எனது மகள் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு திருமண வயது ஆகவில்லை’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு குற்றம்சாட்டப்பட்டவர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், துறவி கோபம் கொள்வார். இதுகுறித்து, நீ யாரிடமும் தெரிவிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 3-ம் தேதி 17 வயதான மகளை, 45 வயது நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளார் சிறுமியின் தந்தை. திருமணத்துக்குப் பிறகு, சிறுமியின் குடும்பத்தினரும், சிறுமியைத் திருமணம் செய்தவரும் உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள தர்காவுக்கு சென்றுள்ளன்ர. அப்போது, சிறுமிக்கும், 45 வயது நபருக்கும் திருமணம் ஆன தகவல், அந்தச் சிறுமியின் சகோதரனுக்குத் தெரிந்துள்ளது.

தகவல் தெரிந்த சகோதரன், அவரது அப்பாவிடமும், தங்கையை திருமணம் செய்தவரிடமும் கடுமையாக சண்டையிட்டுள்ளார். பின்னர், தர்காவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சிறுமியை திருமணம் செய்தவர் பீகார் சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரணை நடத்தியபோது, அந்தச் சிறுமி மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:
First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...