Home /News /national /

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - ஒரே வாரத்தில் 44 பேர் பாதிப்பு

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா - ஒரே வாரத்தில் 44 பேர் பாதிப்பு

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா

Corona Virus | இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

  • News18
  • Last Updated :
    உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் கடந்த ஒரு வரத்தில் 44க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. மக்கள் இயல்பு நடவடிக்கை திரும்பிவருகின்றனர். மேலும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்றுவந்த சூழலில் தற்போது கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கத்தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 44 குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நொய்டாவில் தற்போது 167 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளதாகவும் அதில் 26.3 சதவீதத்தினர் குழந்தைகள் எனவும் தலைமை சுகாதார அலுவலர் மருத்துவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

    கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒன்றாக வகுப்பறைகளில் அருகே அமர்ந்து படிக்கும் சூழல் உருவானதே இந்த தொற்று பரவலுக்கு காரணமா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மாநில மருத்துவ நிபுணர்கள் அளித்த விளக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் மூடியே இருந்த நிலையில், இதே சூழல் தொடர்வது மாணவர்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.

    மாணவர்களின் கல்வியுடன் சேர்த்து, மன நலன், சமூக நலன்கள் ஆகியவையும் பாதிக்கப்படும். எனவே, 12-15 வயதினருக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.அத்துடன் பள்ளிகளில் முறையான கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்தியாவில் புதிதாக 949 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் தற்போது 11,191 பேர் கோவிட் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால், மத்திய மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

    Also read... மண்வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு: 420 கி.மீ சைக்கிளில் பயணித்து கோவை வந்த குழுவினர்

    வரும் ஜுன் மாத காலத்தில் இந்தியாவில் கோவிட் நான்காம் அலை ஏற்படலாம் என ஐஐடி கான்பூர் ஆய்வு எச்சரித்துள்ளது. இந்நிலையில், டெல்லி பேரிடர் மேம்பாட்டு ஆணையம் அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. இதில் கோவிட்-19 பரவல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அன்மையில், கோவிட்-19 பெருந்தொற்று ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி