கூடுதல் நிலக்கரி சரக்கு ரயில்களை இயக்க வேண்டியிருப்பதால் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் நிலக்கரி தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாநிலங்களுக்கு கூடுதல் நிலக்கரியை விநியோகம் செய்யும் விதமாக நிலக்கரி ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ஏற்கனவே இயங்கி வரும் நிலக்கரி ரயில் சேவைகளில் நாள்தோறும் கூடுதலாக 400 பெட்டிகளை இணைப்பதற்கான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில பயணிகள் ரயில் சேவையை நிறுத்திவைக்கும் முடிவுக்கு ரயில்வே அமைச்சகம் வந்துள்ளது. அதன் அடிப்படையில், மே மூன்றாவது வாரம் வரை சுமார் 657 ரயில் சேவை பாதிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 657 ரயில்களை பொருத்தவரை இன்று ஒரே நாளில் 42 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வரத்து மிக குறைவாக உள்ள வழிதடங்களிலும், எந்த மாநிலத்திற்கு நிலக்கரி அதிகளவில் தேவைப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு தேவையான வழிதடங்களில் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
#BREAKING | நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 42 பயணிகள் ரயில்கள் ரத்து#Train | #CoalShortage pic.twitter.com/CRK0ckNWKU
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 29, 2022
இதில், ஒட்டுமொத்தமாக 500 மெயில், எக்ஸ்பிரஸ் சேவைகள் உள்பட 657 ரயில் சேவை பாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மூன்றாவது வாரம் வரை இதே நிலை நீடிக்கும் என்றும், அடுத்த 2 மாதத்திற்குள் நிலக்கரி விநியோகத்திற்கான அளவை அதிகரிப்பதன் மூலம் மாநிலங்களில் மின் தட்டுப்பாடு குறையும் என்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.