முகப்பு /செய்தி /இந்தியா / எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பதவியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்குகளை குற்றவியல் நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Also watch

First published:

Tags: Criminal cases, MLA, MP