• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2020 ஆண்டில் 400% அதிகரித்த குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் - NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

2020 ஆண்டில் 400% அதிகரித்த குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் - NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

NCRB

NCRB

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள தகவலின் படி , 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டட்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கான எதிரான சைபர் குற்றங்கள் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 400 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் படி, 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது , அது தொடர்பான தகவல்களை பரிமாறுவது உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.
உத்திரபிரதேசம் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது .அதனை தொடர்ந்து முறையே கர்நாடக (144), மகராஷ்ரா (137)கேரளா (107) மற்றும் ஒடிசா (71) வழக்குகள் இந்தாண்டு மட்டும் பதிவாகியுள்ளன.

மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக காட்சிகளை காண்பிப்பது , பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது , பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read:   இனி 468 வருஷத்துக்கு அப்புறம் தான் இது நடக்குமாம்.. நவ 19ஆம் தேதி மிஸ் பன்னிடாதீங்க..

தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள தகவலின் படி , 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப சட்டட்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கான எதிரான சைபர் குற்றங்கள் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 400 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான 164 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2018 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிராக 117 சைபர் குற்றங்களும் மற்றும் 2017 ஆம் ஆண்டில் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Also read:   Davemaoite: ஆச்சரியத்தில் அறிவியல் உலகம்.. வைரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட உலகில் இதுவரை பார்த்திராத கனிமம்

2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் , 2019 ஆம் ஆண்டிலிருந்து அது உச்சம் தொட்டுள்ளது அதன் அபாயத்தை உணர்த்துகிறது.

இதுபற்றி குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்பான கிரை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா கூறுகையில் கோவிட் தொற்றுநோய்களின் போது, அதன் பரவலை
கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நீட்சியாக பள்ளிகள் திறக்கபடாத காரணத்தால் ஆன்லைன் வழி கற்றலுக்கு வழிவகுத்தது.

இதனால் அதிக நேரத்தை பொழுது போக்கு ,கல்வி நோக்கங்களுக்காக குழந்தைகள் ஆன்லைனில் செலவிட வேண்டியுள்ளது.அதே சமயம் அதில் இருக்ககூடிய ஆபத்துகள் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்படாததால் அவர்கள் இது போன்ற சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர், குழந்தைகள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறலகளை தடுப்பதில் பெற்றோர் , ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் கவனத்துடன் இருந்து கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும் என்கிறார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: