40 YR OLD WOMAN FILES RAPE CASE AFTER 27 YEARS AS SON SEEKS ANSWERS IN UPS SHAHJAHANPUR MUT
மகனுக்கு தந்தை யார் என்று தெரியவேண்டும்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்
மாதிரிப்படம்
பெண் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து வந்தது, அதை அழிக்க முயலவில்லை. ஆனால் 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை வேறு ஒருவருக்குத் தத்துக் கொடுத்து விட்டனர்.
27 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் பெண் ஒருவர் புகார் கொடுத்தது பரபரப்பாகியுள்ளது.
இப்போது சுமார் 40 வயதிருக்கும் அந்தப் பெண், தன் மகன் தன் தந்தை யார் என்று கேட்டு தொந்தரவு செய்ததால் தற்போது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான விவகாரத்தைப் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் தன் புகாரில் 1994ம் ஆண்டு தனக்கு 13 வயதிருக்கும் என்றும் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறினார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த நாகி ஹசன் என்ற நபர் வீட்டுக்குள் புகுந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இவரோடு நாகி ஹசனின் அண்ணனும் சேர்ந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடந்தவுடனேயே பெண்ணின் உறவினர்கள் புகார் அளிக்க சமூகத்துக்குப் பயந்து மறுத்துள்ளனர். பெண் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து வந்தது, அதை அழிக்க முயலவில்லை. ஆனால் 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை வேறு ஒருவருக்குத் தத்துக் கொடுத்து விட்டனர்.
இந்தப் பெண் இதில் மனது உடைந்து அன்று முதல் தன் குழந்தையைத் தேடி வந்துள்ளார். இதற்கிடையே இவருக்குத் திருமணம் ஆனது, ஆனால் மனைவிக்கு ஏற்கெனவே திருமணம் ஆவதற்கு முன்பே குழந்தை பிறந்திருப்பது தெரியவர கணவனும் பிரிந்து போனான்.
இந்நிலையில் தாயும் மகனும் மீண்டும் ஒன்றிணைந்ததையடுத்து தன் தந்தை யார் என்று கேட்டு வலியுறுத்துவதை அடுத்து அந்தப் பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது: பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து அண்ணன், தம்பிகளை தேடி வருகிறோம், அவர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு தயார் படுத்தி வருகிறோம். 27 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பலாத்காரத்தில் ஆதாரங்களை திரட்டுவது அவ்வளவு எளிதல்ல, இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றார்.
சம்பவம் நடந்த பிறகு அக்கம்பக்கத்தினரின் வாய்க்கு அஞ்சி பாதிக்கப்பட்ட பெண்னும் அவரது சகோதரியும் லக்னோ சென்று விட்டனர், ஆனால் அங்குதான் கர்ப்பமானது தெரியவந்தது. நடந்ததை சகோதரியிடம் விவரிக்க அவர் பலாத்காரம் செய்த நபர்களை எதிர்கொண்டார், ஆனால் இருவரும் இவரை மிரட்டியுள்ளனர். இதனால் போலீஸ் புகார் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனர். 14 வயதானதால் கருச்சிதைவும் செய்ய முடியாது.
இதனையடுத்து குழந்தையை பெற்றெடுத்து தத்து கொடுத்து விட்டனர், இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.