கோவிட் ரிப்போர்ட் வரல.. 3 மருத்துவமனைகள் அழைந்து உயிரைவிட்ட பெண் - ஆதரவற்று நிற்கும் இரண்டு குழந்தைகள்

கோவிட் ரிப்போர்ட் வரல.. 3 மருத்துவமனைகள் அழைந்து உயிரைவிட்ட பெண் - ஆதரவற்று நிற்கும் இரண்டு குழந்தைகள்

மாதிரிப்படம்

கோவிட் பரிசோதனை ரிசல்ட் இல்லாமல் தங்களால் அனுமதிக்க முடியாது எனக் கூறி மற்றொரு மருத்துவமனையில் திருப்பி அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  பெங்களூருவை சேர்ந்த மும்தாஜ் -க்கு 40 வயது. சிங்கிள் பேரண்டான இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். மும்தாஜ் வாழ்வின் கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் சேர போராடி இரண்டு குழந்தைகளைஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டு மறைந்தார். கொரோனாவுக்கு அவர் எடுத்த டெஸ்ட் ரிசல்ட் கூட இன்னும் வந்துசேரவில்லை. 40000 பணம் இல்லாததால் ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். தன்னார்வலர்கள் எப்படி கட்டி விடுகிறோம் எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

  இதுகுறித்து பேசியுள்ள தன்னார்வல அமைப்பினர், “ சனிக்கிழமை இரவு மும்தாஜ் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு உதவி செய்ய முன்வந்தோம். சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் குறைந்துள்ளது. 65- 70 சதவிகிதத்தில் இருந்தது. கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார் ஆனால் அதற்கான ரிப்போர்ட் இன்னும் வந்துசேரவில்லை. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு படுக்கை வசதி இல்லை என்பதால் அனுமதிக்க முடியாது எனக் கூறினர். கோவிட் பரிசோதனை ரிசல்ட் இல்லாமல் தங்களால் அனுமதிக்க முடியாது எனக் கூறி மற்றொரு மருத்துவமனையில் திருப்பி அனுப்பப்பட்டோம்.

  இரண்டாவது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மும்தாஜ் பேச்சு நின்றது. மூன்றாவதாக ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. 40000 ஆயிரம் பணத்தை கட்டினால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

  மும்தாஜ் பணிக்கு செல்லாததால் அவரிடம் போதிய பணம் இல்லை. தொண்டு நிறுவனம் மூலம் பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஒரு நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காதது மனிதாபிமானமற்றது. நாங்களே ஒவ்வொரு மருத்துவமனையை தொடர்புகொண்டோம். அரசு எங்களுக்கு உதவவில்லை. கொரோனா முதல் அலை வீசும்போது கூட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க அரசு உதவி செய்தது. இப்போது அவை செயல்படுவதாக தெரியவில்லை.” என்றனர்.
  Published by:Ramprasath H
  First published: