• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்!

திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாணயங்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் இந்திய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு பண நோட்டுகள், நாணயங்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் 40 டன் மலேசிய நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன.

    திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் இந்திய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு பண நோட்டுகள், நாணயங்களையும் காணிக்கையாக போடுகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் வெளிநாட்டு நோட்டுகளை எளிதில் மாற்றிக்கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்ற முடியாமல் பல ஆண்டுகளாக விழி பிதுங்கி நிற்கிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் 52 டன் அளவுக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடந்த 15 ஆண்டுகளாக இருப்பில் இருந்தன.

    அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற தேவஸ்தானம் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. 2003-ம் ஆண்டில் டெண்டர் மூலம் வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்யும் முயற்சியில் தேவஸ்தானம் ஈடுபட்டது.

    ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் அவற்றின் உண்மையான மதிப்பில் நான்கில் ஒரு பங்கு தொகைக்கு ஏலம் கேட்டனர். விலை மிகவும் குறைவாக இருந்ததால் தேவஸ்தானம் நாணயங்களை விற்பனை செய்யவில்லை.

    அதன்பின் 2009-ம் ஆண்டு நாணயங்களை மத்திய அரசின் MSTC நிறுவனம் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்யவும், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்யவும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

    சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு பக்தர்கள் மூலம் மலேசிய நாணயங்கள் தவிர மற்ற நாடுகளை சேர்ந்த 12 டன் நாணயங்களை தேவஸ்தானம் மாற்றிக் கொண்டது.

    தற்போது தேவஸ்தானத்திடம் சுமார் 40 டன் அளவுக்கு மலேசிய நாணயங்கள் இருப்பு உள்ளன. மலேசிய நாணயங்களை மாற்றுவது தொடர்பாக தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியை அணுகியபோது, வெளிநாட்டு நாணயங்களை இந்தியாவில் மாற்றுவது எளிதான காரியம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.

    அவற்றை தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மூலம் மாற்ற தேவஸ்தானம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர்கள் நாணயங்களின் மதிப்பை விட மிகவும் குறைந்த விலைக்கு கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.

    இதனால் மலேசிய நாட்டு தெலுங்கு சங்க அமைப்பு மூலம் 40 டன் நாணயங்களையும் இந்திய ரூபாயாக மாற்றும் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: