மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று!

 • Share this:
  மகாராஷ்ட்ராவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய 40 கேரள செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரையில், 881 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மகாராஷ்டிராவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அந்த மருத்துவமனையில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கேரளாவில் இருந்து மகாராஷ்ட்ராவுக்கு சென்று தங்கி பணியாற்றிய செவிலியர். மும்பையில் உள்ள அந்த மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரிடம் இருந்து செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 150-க்கும் மேற்பட்ட செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

  Also see:
  Published by:Karthick S
  First published: