முகப்பு /செய்தி /இந்தியா / இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள்!? காரில் கடத்தி கட்டிப்போட்டு வன்கொடுமை என பரபரப்பு குற்றச்சாட்டு!

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள்!? காரில் கடத்தி கட்டிப்போட்டு வன்கொடுமை என பரபரப்பு குற்றச்சாட்டு!

பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்

அந்த துண்டு சீட்டை வாங்க சென்ற போது, என் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்தனர், அதன் பிறகு நான் சுயநினைவு இழந்துவிட்டேன்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Jalandhar, India

பஞ்சாப் ஜலந்தர் நகரில் 20 - 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்கள் 4 பேர் தன்னை காரில் கடத்தி சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த அவர், “பஞ்சாப் ஜலந்தர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வேலையை முடித்துவிட்டு தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அதில் இருந்த 20 - 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை கொடுத்து அட்ரெஸ் கேட்டனர்.

அந்த துண்டு சீட்டை வாங்க சென்ற போது, என் மீது மயக்க மருந்து ஸ்பிரே அடித்தனர், அதன் பிறகு நான் சுயநினைவு இழந்துவிட்டேன். மீண்டும் எழுந்து பார்க்கையில் மறைவான ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு என் கை, கால்களை கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.” என தெரிவித்தார்.

மேலும் அந்த பெண்கள் அப்போது குடித்திருந்ததாகவும் தன்னையும் குடிக்க வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு 4 இளம்பெண்களும் தன்னை மாறி மாறி வன்கொடுமை செய்ததாக கண்ணீர் மல்க கூறினார். பின்னர் தன்னை அதிகாலை 3 மணிக்கு கை, கண்களை கட்டி இறக்கிவிட்டு சென்றதாக கூறினார்.

14 கொலை வழக்குகள்.. அம்மா பெயர சொன்னாலே ஓட்டுதான்.. குஜராத்தை அலறவைத்த லேடி டான்.. பரபர வரலாறு!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த பெண்கள் பணக்காரர்கள் போல இருந்தனர் எனவும் நன்றாக ஆங்கிலம் பேசினார்கள் எனவும் தெரிவித்தார். அதில் இருவர் பஞ்சாபி மொழியில் பேசினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த இளம்பெண்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

4 இளம்பெண்கள் இரவு நேரத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Gang rape, Punjab