ஹோம் /நியூஸ் /இந்தியா /

4 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. இரும்புக் கதவில் அடித்துக்கொலை.. பகீரை கிளப்பிய 22வயது இளைஞர்!

4 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை.. இரும்புக் கதவில் அடித்துக்கொலை.. பகீரை கிளப்பிய 22வயது இளைஞர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

4 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த 22 வயது வாலிபரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள முன்டாமரே என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன், கடந்த செவ்வாய் கிழமை மாலை திடீரென மாயமானார். சிறிது நேரத்திற்குப் பின் சிறுவனின் வீட்டார் அவனை தேடித் தொடங்கி அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களை விசாரித்துள்ளனர். அவர்கள் மாயமான சிறுவனை பக்கத்து வீட்டில் பார்த்தாக பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

உடனடியாக, பெற்றோர் அருகே உள்ள வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த வீட்டு மாடியில் மாயமான சிறுவன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளான். பதறிப்போன வீட்டார், சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவத்தை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து 22 வயது உறவுக்கார வாலிபர் தலைமறைவானார்.

சந்தேகத்தின் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. இவர் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் இன்ஜினியரிங் மாணவர் ஆவார். சம்பவ தினத்தன்று 4 வயது சிறுவனை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

பின்னர், சிறுவன் உண்மையை வெளியே சொன்னால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவனை வீட்டு மாடியில் உள்ள இரும்புக் கதவில் மோதி அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். உடற்கூறு ஆய்வில் உண்மைகள் எப்படியும் வெளியாகிவிடும் என்று உணர்ந்த இளைஞர் தனது குற்றத்தை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட இளைஞரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


First published:

Tags: Crime News, POCSO case, Sexual abuse