ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராமர் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் நடனம்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்

ராமர் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் நடனம்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்

பெண் காவலர்கள் நடனம் வைரல் வீடியோ

பெண் காவலர்கள் நடனம் வைரல் வீடியோ

சஸ்பெண்ட் ஆன நான்கு பெண் காவலர்கள் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேசத்தில் பெண் காவலர்கள் தங்கள் பாதுகாப்பு பணியின் போது பாடலுக்கு நடனடிமாடிய வீடியோ வைரலான நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு அடிக்கல் நாட்டினார்.

2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக நடைபெற்று சங்கராந்தி பண்டிகை காலத்தில் கோயிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாராகும் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமானத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்து வருகின்றனர்.கோயில் வளாகத்தில் பிரத்தியேக காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கடந்த வாரம் இந்த கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் நான்கு பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை ஒன்றில் மத்திய நேரம் தனியாக இருந்துள்ளனர். இவர்கள் அப்போது போஜ்பூரி பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து கைத்தட்டி பாட, ஒரு பெண் காவலர் அதற்கு நடனமாடியுள்ளார். இதை மற்றொரு காவலர் வீடியோ எடுத்துள்ளார். இவர்கள் யாரும் சீருடையில் இல்லை.

பெண் காவலர்கள் நடனமாடும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே, அப்பகுதி சீனியர் காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் வீடியோவில் இருந்த கவிதா படேல், கமினி குஷ்வாஹா, காஷிஷ் ஷானி, சந்தியா சிங் ஆகிய நான்கு பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை அடுத்து ராமர் கோயில் பாதுகாப்பு பணிக்கு வேறு நான்கு பெண் காவலர்களை அம்மாநில காவல்துறை பணியமர்த்தியுள்ளது.

First published:

Tags: Ayodhya Ram Temple, Uttar pradesh, Viral Video