திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது

திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 4 தமிழகத் தொழிலாளர்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 4 தமிழர்கள் கைது
செம்மரம் கடத்தி கைதானவர்கள்
  • Share this:
திருப்பதி அருகே செம்மரம் கடத்த முயன்றதாக வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை வனச்சரகர் பட்டாபி தலைமையில் தலகொணா வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செம்மரங்களை சுமந்தபடி வந்ததாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கோபால் ராமகிருஷ்ணா, அப்பாசாமி, வெள்ளி முத்துநாதம் மற்றும் குப்புசாமி செளந்தரராஜன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் படிக்க...சமூகத்தில் வெறுப்பையும், பிளவையும் டிரம்ப் தூண்டுகிறார் - ஜோ பைடன்


அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading