குவாட் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். முன்னதாக அவர் டெல்லியில் இருந்த தனி விமானத்தில் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றபோது பிரதமர் மோடி தனது நீண்ட விமானப் பயணத்தில் பல்வேறு முக்கியக் கோப்புகள், அலுவலகப் பணிகளைக் கவனித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தையும் தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்த பிரதமர் மோடி “நீண்ட விமானப் பயணம் என்பது சில கோப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது,” என குறிப்பிட்டிருந்தார்.
A long flight also means opportunities to go through papers and some file work. pic.twitter.com/nYoSjO6gIB
இதையடுத்து, பிரதமர் மோடி விமானத்தில் அலுவலகப் பணிகளை கவனிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரபட்டு வைரலானது. பிரதமர் மோடி விமானத்தில் பணிகளை கவனிக்கும் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, முன்னாள் இந்திய பிரதமர்கள் இதுபோல விமானத்தில் பணிகளை மேற்கொண்ட புகைப்படங்களும் தேடி கண்டெடுக்கப்பட்டு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Old pic : My grandfather & Prime minister Sh. Lal Bahadur Shastri ji Reading Files In Aeroplane. pic.twitter.com/GoxjE9x797
அந்த வகையில், இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி விமான பயணத்தின் போது, பல்வேறு கோப்புகளை பார்த்தபடி இருக்கும் புகைப்படும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கையில் பேனாவுடன் கோப்புகளை பார்த்தபடி லால் பகதூர் இருக்கிறார். அவருக்கு முன்னாள் பல கோப்புகளும் கிடக்கின்றன.
லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி, தனது தாத்தா விமானத்தில் சென்றபோது கோப்பு பார்த்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விமான பயணத்தில் வேலை செய்வது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், ராஜீவ் காந்தி கணிணியில் பணிபுரிந்த படி இருக்கிறார். அவரது மேஜையில் உணவுகளும் பக்கத்தில் உள்ளன.
I have travelled with many PM’s and all do that but for BJP everything is first time. For them India didn’t exist before 2014. https://t.co/0hpVLr6BHN
இதுபோலவே முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் விமானத்தில் கோப்பு பார்த்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.