ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றில் நான்கு காலிஸ்தான் பிரிவினை இயக்க பயங்கரவாதிகள் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பூபேந்திரா, அமன்தீப், பர்வீந்தர், குர்ப்ரீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நான்கு பயங்கரவாதிகளும் பிரோஸ்பூரில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதிக்கு கார் மூலம் சென்றுள்ளனர்.
அப்போது இவர்களை உளவுத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர்.இந்த ஆப்பரோஷனுக்காக உளவுத்துறையினருக்கு தெலங்கானா, பஞ்சாப் மற்றும் ஹரியானா காவல்துறையினர் உதவி செய்துள்ளனர்.இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்த கிரெனேட், ஐஇடி வெடிகுண்டு, துப்பாக்கிகள், தோட்டக்கள் ஆகியவற்றை வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கைப்பற்றியுள்ளனர். இந்த வெடிபொருள்கள் இவர்களுக்கு ட்ரோன் மூலம் வந்து சேர்ந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணைப்படி, இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியான ஹர்விந்தர் சிங் என்பவரிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இயக்கத்துடன் தொடர்பு உள்ளது எனவும், இவர்கள் இந்த வெடிபொருளை தெலங்கானா மாநிலத்திற்கு கொண்டு சேர்க்க இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் விசாரணைக்கா ரிமான்டில் எடுக்க திட்டமிட்டுள்ளது. பஞ்சாப்பை குறிவைத்து காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடவுள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்து வருகிறது.
இதையும் படிங்க: ‘காவல்துறை உங்கள் நண்பன்’... சைக்கிளில் உணவு டெலிவரி செய்த இளைஞருக்கு பைக் வாங்கி கொடுத்த போலீஸ்!
குறிப்பாக, நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவும், பஞ்சாப்பின் பல தலைவர்களை தாக்கவும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. இதற்காக, உள்ளூர் கேங்க்ஸ்டார்கள் கிரிமினல்களை அவர்கள் பயன்படுத்தவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக பஞ்சாப்பின் பாட்டியாலாவில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த தலைவர் நடத்திய ஊர்வலம் இரு பிரிவின் இடையே பெரும் மோதலாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அங்கு இணைய சேவை முடக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISI, Terrorists