மீரட்டில் உள்ள ஒரு பள்ளியில் பெண் ஆசிரியையை துன்புறுத்தியதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் ஆசிரியை மீது மாணவர்கள் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்த இரண்டு வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரில், 27 வயதான ஆசிரியர், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் தன்னை நீண்ட காலமாக துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: 'வந்தே மாதரம்' பாடத் தயங்கினாரா கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா? வீடியோவால் வெடித்த சர்ச்சை!
கிதாவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராத்னா இனயத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மாணவி உட்பட 4 பள்ளி மாணவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். ஜூன் 24 அன்று பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் தன்னிடம் காதலைக் கூறியபோது வரம்பு மீறுவதாக கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் கிளிப்பை சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.
Viral video from meerut
Its very disgusting.. pic.twitter.com/UYNpZDWkaM
— Avinash Chaudhry (@avinrajazad) November 27, 2022
இது தவிர, வகுப்பறைக்குள் அவர்கள் தன்னை அவதூறாக பேசிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது என்று அவர் புகாரில் கூறினார். அந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டு சுமார் 16 வயதுடைய 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சர்மா கூறினார்.
நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக மீரட் போலீசார் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Meerut S24p10, Verbally harrased