Home /News /national /

நொடி பொழுதில் தரைமட்டமான 4 மாடி கட்டிடம்... மும்பையில் பரபரப்பு - வைரல் வீடியோ

நொடி பொழுதில் தரைமட்டமான 4 மாடி கட்டிடம்... மும்பையில் பரபரப்பு - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Mumbai Building Collapses | இன்று மாலை பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    மும்பையில் பாழடைந்த 4 மாடி கட்டிடம் நொடி பொழுதில் தரைமட்டமான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை போர்வலி மேற்கு சாய்பாபா நகர் பகுதியில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்து. இந்த கட்டிடம் மிகவும் பாழடைந்த கட்டிடமாக இருந்து வந்தது. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்பதால் இதில் வசித்தவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர்.



    இன்று மாலை பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்துள்ளது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடியிருப்பு வாசிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு இருந்தாலும் வேறு யாராவது கட்டிடத்தில் சிக்கி உள்ளார்களா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

    Also Read : பீஸ் கட்டினால் தான் டிசி என கறார்... மாணவன் தீக்குளித்து கல்லூரி முதல்வரையும் கட்டிப்பிடித்ததால் பரபரப்பு

    இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழும் போது அருகில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் யாருக்கு எந்த காயமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Mumbai, Trends, Viral

    அடுத்த செய்தி