Home /News /national /

பாஜக மீதுள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : தேர்தல் வெற்றி குறித்து அமித்ஷா கருத்து

பாஜக மீதுள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : தேர்தல் வெற்றி குறித்து அமித்ஷா கருத்து

அமித்ஷா

அமித்ஷா

உ.பி.யில் முதல்வர் வேட்பாளரான யோகி ஆதித்யநாத், தான் நின்ற கோரக்பூர் தொகுதியில் 92,844 வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    பாஜக மீதுள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக, 4 மாநிலங்களில் வெற்றி பெற்றது குறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்நிலையில் 4 மாநில தேர்தல் வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 'உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளும், விவசாயிகளும் பிரதமர் நரேந்திர மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் வெற்றி. ஊழல் இல்லாத நல்லாட்சியை யோகி ஆதித்யநாத் அளித்து வருகிறார். அவர் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பிரமாண்ட வெற்றியைத் தந்த உத்தரப்பிரதேச வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தனது தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    இதையும் படிங்க - Bhagwant Mann : காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராகப் போகும் பக்வாந்த் மன்...

    முதல்வர் வேட்பாளரான யோகி ஆதித்யநாத், தான் நின்ற கோரக்பூர் தொகுதியில் 92,844 வாக்குகள் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

    யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சபாவதி சுக்லாவைக் காட்டிலும் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோராக்பூர் தொகுதியில் மொத்த வாக்குகள் 1,50,934 என்றிருந்த நிலையில், அதில் 64.29% பேர் யோகி ஆதித்யநாத்துக்கு வாக்களித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Amit Shah, Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி