முகப்பு /செய்தி /இந்தியா / Corona Crisis: குடும்பத்தில் 4 பேர் பலி: மொத்த குடும்பத்தையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி நிற்கும் சிறுமிகள்!

Corona Crisis: குடும்பத்தில் 4 பேர் பலி: மொத்த குடும்பத்தையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி நிற்கும் சிறுமிகள்!

துர்கேஷ் பிரசாத்தின் குடும்பத்தினர்..

துர்கேஷ் பிரசாத்தின் குடும்பத்தினர்..

குடும்பத்தில் ஆண்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மாமியாரும், மருமகளும் செய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து துர்கேஷ் பிரசாத்தின் மனைவியும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

  • Last Updated :

நாட்டில் கோர தாண்டவமாடிக் கொண்டிருக்கும் கொரோனாவின் இரண்டாம் அலை, முதல் அலையைக் காட்டிலும் கொடூரமாக தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதன் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கிலானவர்கள் புதிதாக பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதன் எதிரொலியாக மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காமல் சிகிச்சைக்கு வழியின்றியும், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் மரணங்கள் அதிகரித்துள்ளன. சாதனை அளவாக ஒரே நாளில் 4,200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் குடும்பத்தினரையும், தங்களின் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து வருவதை அன்றாடம் பார்க்க முடிகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெற்றோர் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றனர் 6 மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் இருவர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த துர்கேஷ் பிரசாத் என்ற முதியவர், அவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்திகள் இருவருடன் வசித்து வந்தார்.

துர்கேஷ் பிரசாத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் காரணமாக மருத்துவர்களா; பரிந்துரைக்கப்பட்ட மருத்துகளை எடுத்துக் கொண்டு அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருடைய மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி துர்கேஷ் பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் பின்னர் ஒரு வாரத்தில் துர்கேஷ் பிரசாத்தின் மகன் அஸ்வினும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

குடும்பத்தில் ஆண்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மாமியாரும், மருமகளும் செய்வதறியாது திகைத்தனர். இதனையடுத்து துர்கேஷ் பிரசாத்தின் மனைவியும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

மே 7ம் தேதி துர்கேஷ் பிரசாத்தின் மருமகளும் தன்னுடைய இரண்டு மகள்களை நிர்கதியாக்கிவிட்டு மரணத்தை தழுவினார்.

Also Read:    வாக்கிங் சென்ற போது விபரீதம்: நாய் கடித்துக் குதறியதில் தொழிலாளி பலி - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

பெற்றோர், தாத்தா, பாட்டி என 4 பேரையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துவிட்ட 6 மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் இருவரும் யாரும் இல்லாமல் நிர்கதியாய் நிற்பது காண்போரை கலங்கச் செய்வதாக இருக்கிறது.

இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில், போதிய மருத்துவ வசதிகள் கிடைத்திருந்தால் துர்கேஷ் பிரசாத்தின் குடும்பத்தினரை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்தனர்.

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் இரண்டு சிறுமிகளும் பெரேலியில் உள்ள தங்களின் அத்தை வீட்டுக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

First published:

Tags: Corona, COVID-19 Second Wave, Uttar pradesh