• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குஜராத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் மட்டுமே வெல்ல வாய்ப்பு

குஜராத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் மட்டுமே வெல்ல வாய்ப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் பலம் 69 ஆக குறைந்தது

  • Share this:
    குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

    குஜராத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இம்மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 103 எம்.ஏக்களும், காங்கிரஸுக்கு 73 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளது.

    இந்நிலையில், இந்த இருகட்சிகளுக்கும் தலா இரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், காங்கிரஸின் பலம் 69 ஆகக் குறைந்துள்ளது.

    அதனால் அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் கட்சிமாறி வாக்களிப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி 14 எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: