Home /News /national /

பேராசிரியரை காரில் கடத்தி போன் பே மூலம் ரூ.1.14 லட்சம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கைது!

பேராசிரியரை காரில் கடத்தி போன் பே மூலம் ரூ.1.14 லட்சம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கைது!

பேராசிரியரை காரில் கடத்தி சென்று போன் பே மூலம் ரூ.1.14 லட்சம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராசிரியரை காரில் கடத்தி சென்று போன் பே மூலம் ரூ.1.14 லட்சம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராசிரியரை காரில் கடத்தி சென்று போன் பே மூலம் ரூ.1.14 லட்சம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் என கூறி பேராசிரியரை காரில் கடத்திச் சென்று தாக்கி ரூ.1.14 லட்சம் பணம் பறித்த வழக்கில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார், ரூ.84,000 பணம் போலி அடையாள அட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடப்பா மாவட்டம் காஜி பேட்டை மண்டலம் பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (37). ராஜம்பேட்டை அரசு கல்லூரியில் ஒப்பந்த பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் உதயகுமாரை கடந்த 23-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் என கூறி மிரட்டிய 4 பேர் காரில் கடத்திச் சென்று தாக்கி அவருடைய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.1.14 லட்சம் பணத்தை போன் பே மூலம் தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பினர். பின்னர் அவரை நடுரோட்டில் விட்டுச் சென்றனர். அங்கிருந்து தப்பி வந்த பேராசிரியர் உதயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தி சென்றவர்கள் வங்கி கணக்கு ஆதாரத்தின் அடிப்படையில் நான்கு பேரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடப்பா அருகில் உள்ள கொக்கராய பள்ளி கிராஸ் ரோட்டில் எஸ்.ஐ சீனிவாஸ் போலீசாருடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூரில் இருந்து வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் காரை சற்று முன்னால் நிறுத்தி இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அப்போது காரில் இருந்த 4 பேரும் பேராசிரியரை தாக்கி பணம் பறித்த போலி சிபிஐ அதிகாரிகள் என தெரியவந்தது. பிடிப்பட்ட அனந்தபுரத்தை சேர்ந்த நாகேஷ்(26), நெல்லூரை சேர்ந்த சுந்தரராமையா(32), கடப்பாவை சேர்ந்த நவீன் ராஜீ (27), பிரபாகர் நாயக்(22) ஆகியோர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து, பிடிப்பட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு கார், ரூ.84 ஆயிரம் பணம், சி.ஆர்.பி.எப் போலி அடையாள அட்டை ஆகியவற்றை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

    Also read: மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Robbery

    அடுத்த செய்தி