Home /News /national /

வாரத்தில் 4 நாள் வேலை, குறைந்த சம்பளம், அதிக PF : 2022-ல் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம்!

வாரத்தில் 4 நாள் வேலை, குறைந்த சம்பளம், அதிக PF : 2022-ல் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம்!

புதிய தொழிலாளர் திட்டம்

புதிய தொழிலாளர் திட்டம்

இந்தியாவில் உள்ள ஊழியர்கள் அடுத்த ஆண்டு முதல் 5 நாள் வேலை வாரத்திற்கு மாறாக 4 நாள் வேலை வாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு. ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, வேலை நேரம் மற்றும் வார நாட்களின் எண்ணிக்கை உட்பட பல அம்சங்கள் இந்த புதிய குறியீடுகளின் கீழ் மாறக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்கவும் ...
2022-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நிதியாண்டில் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த 4 தொழிலாளர் குறியீடுகளை அடுத்த நிதியாண்டில் அமல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக என்று மூத்த அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி PTI செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி, வேலை நேரம் மற்றும் வார நாட்களின் எண்ணிக்கை உட்பட பல அம்சங்கள் இந்த புதிய குறியீடுகளின் கீழ் மாறக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 2021 முதலே புதிய தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் என 2 தரப்பும் இந்த 4 குறியீடுகளின் கீழ் விதிகளை அறிவிக்க வேண்டும், பின் அவற்றை நாட்டின் சட்டங்களாக மாற்ற வேண்டும். எனவே இது தொடர்பாக வரைவு விதிகளை இறுதி செய்யும் பணியில் பல மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன. ஏராளமான மாநிலங்கள் இதற்கான வரைவு விதிகளை இறுதி செய்துள்ள நிலையில், 2022-23 நிதியாண்டில் இவை செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.

புதிய தொழிலாளர் குறியீடுகள் (new labour codes) நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள ஊழியர்கள் அடுத்த ஆண்டு முதல் 5 நாள் வேலை வாரத்திற்கு மாறாக 4 நாள் வேலை வாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல 4 நாள் வேலை வாரம் கொடுக்கப்பட்டாலும் தற்போது வழக்கமாக இருக்கும் வார வேலை நாட்களின் மொத்த பணிநேரத்தை ஈடுகட்டும் வகையில், அந்த 4 நாட்களில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் மணிநேரங்கள் வேலை செய்ய வேண்டும்.

ALSO READ |  குளிரில் நடுங்கும் குட்டியானைகள் ... போர்வை போர்த்தி பராமரிக்கும் காஸிரங்கா தேசிய பூங்கா

அதே நேரம் ஊதியக் குறியீடு அமலுக்கு வந்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கணக்கிடப்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஊழியர்களின் டேக் ஹோம் சேலரி குறையும் அதே நேரத்தில் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

4 நாள் வேலை வாரத்தோடு அறிமுகப்படுத்தப்பட உள்ள மேற்கண்ட முக்கிய மாற்றம் காரணமாக ஊழியர்களின் ஊதியம் குறையும் அதே சமயம் அவர்களின் PF அக்கவுண்ட்களில் அதிக பணம் சேரும். இதற்காக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் PF கணக்கிடப்படும் விதத்தில் பெரிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும். சம்பளத்தில் பாதி அடிப்படை ஊதியம் மற்றும் பேஸிக் வேஜஸ் 50% என கட்டுப்படுத்தப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ |  தேசிய கணித தினம் 2021: உலகம் போற்றும் கணித மேதை ராமானுஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்!

வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு அடிப்படை ஊதியத்தின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது, இதில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) அடங்கும். தற்போதைய விதிமுறைகளின்படி, PF நிலுவைத் தொகைக்கான முதலாளியின் சதவீத அடிப்படையிலான பங்களிப்பு, ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பொறுத்தது. அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படுவதால், அதிக பிஎப் கழிக்கப்படும், இதனால் பணியாளரின் சம்பளம் குறையும்.

PF-க்கான பங்களிப்பு அடிப்படை ஊதியத்தின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது, இதில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) அடங்கும். தற்போதைய விதிமுறைகளின்படி, PF நிலுவைத் தொகைக்கான நிறுவனத்தின் சதவீத அடிப்படையிலான பங்களிப்பு, ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பொறுத்தது.

ALSO READ |  பழங்குடியினரை மதமாற்ற முயற்சி செய்ததாக 4 மதபோதகர்கள் கைது

புதிய விதிகளில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்படுவதால், அதிக PF கழிக்கப்படும், இதனால் பணியாளரின் சம்பளம் குறையும். உதாரணமாக ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ.50,000 எனில், அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆகவும், மீதமுள்ள ரூ.25,000 அலவன்ஸ்களாகவும் இருக்கலாம். இருப்பினும், இந்த அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டால், அதிக PF கழிக்கப்படும். இதனால் கொடுக்கப்பட்டு வரும் ஊதியம் குறைந்து நிறுவனத்தின் பங்களிப்பு PF-ல் அதிகரிக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Epfo, Government Employees, Salary

அடுத்த செய்தி