புதுச்சேரியில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

புதுச்சேரியில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

புதுச்சேரி பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் மற்றும் ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளர்...

 • Share this:
  புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியில், அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

  அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் மற்றும் ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பாஜக 10 தொகுதிகளில் களம் காண இருப்பதாக சொல்லப்படுகின்றது.

  இந்நிலையில், அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகள் எவை என்பது இன்று முடிவாகும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

  Must Read : அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : டிடிவி தினகரன் பெயர் இல்லை

  புதுச்சேரியில் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் அது தனித்து களம் காணும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: