• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எந்த துணியை எடுத்தாலும் விலை ரூ.1 தான்... ஏழைகளுக்காக பெங்களூரு மாணவர்கள் தொடங்கிய பொட்டிக்!

எந்த துணியை எடுத்தாலும் விலை ரூ.1 தான்... ஏழைகளுக்காக பெங்களூரு மாணவர்கள் தொடங்கிய பொட்டிக்!

ஏழைகளுக்காக பெங்களூரு மாணவர்கள் தொடங்கிய பொட்டிக்

ஏழைகளுக்காக பெங்களூரு மாணவர்கள் தொடங்கிய பொட்டிக்

Bengaluru Boutique : இந்த ஆடை வங்கியானது, 'ஏழைகளுக்கான பெங்களூரின் பொட்டிக்' என்றும் அழைக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தவிர கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்வதை இந்த மாணவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

  • Share this:
நம் இந்திய நாட்டில் கலாச்சாரங்கள் வேறுபடுவது போல, மக்களின் வாழ்வியலும் செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என வேறுபாட்டுடன் இருக்கிறது. இங்கு பணக்காரர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரியான சொகுசு வாழ்க்கையை வாழலாம். எவ்வளவு துணி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். புதிய ட்ரெண்ட் மற்றும் ஃபேஷனுக்கு ஏற்றாற்போல தங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் ஏழை எளியோருக்கு அது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. நல்ல ஆடைகளை அணிவது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். இந்த நிலையில் ஃபேஷன், ஸ்டைல் என்பதெல்லாம் அவர்களுக்கு எட்டாக்கனியே. ஆனால், நான்கு கல்லூரி நண்பர்கள் ஒன்றிணைந்து தங்களால் முடிந்த அளவு ஏழைகள் ஸ்டைலான ஆடைகளை அணிவதை சாத்தியமாக்கியுள்ளனர். ஒரு உன்னதமான மற்றும் தனித்துவமான முன்முயற்சியில், கர்நாடகாவின் பெங்களூரு நகரத்தில் வசிக்கும் நான்கு கல்லூரி மாணவர்கள் இணைந்து "இமேஜின் கிளாத்ஸ் பேங்க்" என்ற துணி வங்கியைத் தொடங்கியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள பெரடெனா அக்ரஹாரா, எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள லவகுஷா லேஅவுட்டில் அமைந்துள்ள இந்த துணி வங்கியில், ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர் 1 ரூபாய் கொடுத்து தங்களுக்கான துணியை வாங்கிச்செல்லலாம். அதாவது இந்த துணி வங்கியில் எந்த ஒரு துணியை எடுத்தாலும் அதற்கு 1 ரூபாய் கொடுத்தால் போதும். பெங்களூரு நண்பர்களின் இந்த நல்லெண்ண முயற்சி செப்டம்பர் 12ம் தேதி முதல் ஆரம்பமானது. அன்றிலிருந்து வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த துணி வங்கி திறக்கப்பட்டு வருகிறது.

 

  

இந்த ஆடை வங்கியானது, 'ஏழைகளுக்கான பெங்களூரின் பொட்டிக்' என்றும் அழைக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தவிர கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்வதை இந்த மாணவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். மங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாகப் படித்த வினோத் பிரேம் லோபோ, மெலிஷா நோரோன்ஹா, நிதின் குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய நான்கு நண்பர்களின் யோசனைதான் இந்த தனித்துவமான துணி வங்கி.

ALSO READ |  “பெரிய பயணங்களும் முதல் அடியிலே தொடங்கும்”- ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த மோட்டிவேஷனல் வீடியோ!

நான்கு நண்பர்களும் 2013ம் ஆண்டில் இமேஜின் டிரஸ்ட் என்ற ஒரு NGO அமைப்பு ஒன்றைத் தொடங்கினர். அவர்கள் தங்கள் வேலைகளைத் தவிர NGO-வையும் நிர்வகித்து வந்தனர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஆண்டுகளாக சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் பெங்களூரில் துணி வங்கி ஒன்றைத் திறந்து வைத்தனர். மேலும் அந்த கடையில் துணிகளின் விலையை 1 ரூபாய் என நிர்ணயித்ததற்கான காரணம், NGO வாடிக்கையாளர்களின் சுயமரியாதையை பேணிக்காப்பதற்காகவே என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

  

இதனால் ஏழைகள் தங்களுக்கான துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லாமல் கவுரவமாக அதனை வாங்கிச் செல்வார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த துணி வங்கியில் ஷீட்கள், துண்டுகள், துணிகள், திரைச்சீலைகள் போன்ற துணிவகைகள் கிடைக்கும். கடந்த செப்டம்பர் முதல் ஒவ்வொரு வாரமும் இங்கு சுமார் 150 குடும்பங்கள் வந்து செல்கின்றனர். இந்த துணி வங்கியில் வசூலிக்கப்படும் பணம் ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படுவதாகவும் பெங்களூரு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: