அதிர்ச்சி தரும் விஷயமாக ராட்சத பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சஹிதாரி புலிகள் பாதுகாப்பு சரணாலயம் அருகே நடந்துள்ளது.
போலீசார் கைது செய்த 4 பேரும் வேட்டைக்காரர்கள் என தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவின் கபா பகுதியில் அமைந்துள்ள புலிகள் சரணாலயத்திற்குள், சட்டவிரோதமாக புகுந்த அவர்கள் இந்த அருவெறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர். சிசிடிவியின் உதவியால் வனத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்தனர்.
அவர்கள் பெயர் சந்தீப் துக்ராம், பவார் மங்கேஷ், ஜனார்தன் காம்டேகர் மற்றும் அக்சய் சுனில் என்று போலீசார் தெரிவித்தனர். இவர்களைப் பிடித்த போலீசார் செல்போன்களை பிடுங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க - 2700 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
இதில் 4 பேரும் கும்பலாக சேர்ந்து ராட்சத பல்லியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள், விரைவில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க - 'கமிஷன் கேட்டு அமைச்சர் தொல்லை' - கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்த கான்ட்ராக்டர்
வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ், அரிய வகை உயிரினமாக வங்காளத்து ராட்சத பல்லிகள் கருதப்படுகின்றன. இதனை தாக்கியவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.