Hyderabad Encounter | "இந்த என்கவுண்டர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” பெண் மருத்துவரின் தங்கை மகிழ்ச்சி

Hyderabad Encounter |
என்கவுண்டர் நடந்த இடம்
  • News18
  • Last Updated: December 6, 2019, 9:52 AM IST
  • Share this:
பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைதான நால்வர், இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாத்நகர் அருகே உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் தனியாக டோல்கேட்டை கடப்பதை கண்ட சிலர் வேண்டுமென்றே பெண்ணின் வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர். இதனை அடுத்து, அந்தப் பெண் உதவியின்றி தவித்து நிற்கும் போது, உதவுவது போல சென்று, அவரை அங்கிருந்து கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து, பெட்ரோல் உற்றி எரித்துக்கொன்றுள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற போலீசார் எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனை அடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.இந்த என்கவுண்டர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெண்ணின் சகோதரி, “இந்த என்கவுண்டர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். போலீசார் மற்றும் ஊடகம் அனைவருக்கும் நன்றி. எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

பெண்ணின் பெற்றோர், தங்களது மகளின் ஆத்மா இப்போது சாந்தியடையும் என்றும் கூறியுள்ளனர்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த நிர்பயாவின் தாயார் கூறுகையில், “இந்த என்கவுண்டர் வரவேற்கத்தக்கது. 7 ஆண்டுகளாக எனது மகளுக்கான நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். எனது மகளை கொன்றவர்களையும் தூக்கிலிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. எனினும், வழக்கின் விசாரணை நிலையிலே, போலீசார் கைதானவர்களை என்கவுண்டர் செய்திருக்கக் கூடாது என்றும் சில மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading