அத்தியாவசிய மருந்துகளின் புதிய பட்டியல் - 39 மருந்துகள் சேர்ப்பு,16 மருந்துகள் நீக்கம்!

Essential Medicines

NLEM பட்டியல் திருத்தப்பட்டு உச்சவரம்பு விலைகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நிர்ணயிக்கப்படுகின்றன.

  • Share this:
தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM- National List of Essential Medicines) மத்திய அரசு திருத்தம் செய்து இருக்கிறது. சமீபத்திய திருத்தத்தின் படி NLEM-ல் 39 மருந்துகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இருந்த 16 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

நாடு முழுழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்கும் முயற்சியாக தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை மத்திய அரசு திருத்தி உள்ளது. சில ஆன்ட்டி வைரஸ் மருந்துகளை தவிர புற்றுநோய், நீரிழிவு, காசநோய் மற்றும் எச்.ஐ.வி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் மருந்துகள் தற்போது அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து NLEM 2021-ன் படி தற்போது 399 மருந்துகள் அத்தியாவசிய பட்டியலில் உள்ளது. இதில் சுமார் 376 மருந்துகள் அரசின் நேரடி விலை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. தற்போது புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பாலானவை அசாசிடிடின் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் டோலுடெக்ராவீர், தருணாவீர்+ரிடோனாவிர் (Darunavir+Ritonavir) போன்ற ஃப்ளூடராபைன் ஆன்டிரெட்ரோவைரல் (Fludarabine antiretroviral), புதிய தலைமுறை காசநோய் மருந்துகள், ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்து, போதை பழக்கத்தை நிறுத்தும் சிகிச்சைக்கு உதவும் மருந்துகள் உள்ளிட்டவை அடங்கும்.

NLEM பட்டியல் திருத்தப்பட்டு உச்சவரம்பு விலைகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நிர்ணயிக்கப்படுகின்றன. 2016 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த முந்தைய பட்டியல், கடந்த மார்ச் 2021-ல் முடிவடைந்தது.

Also Read: பெண் போல பேசி சிறுமிகளை சமூக வலைத்தளத்தில் இப்படியும் ஏமாத்துறாங்க.. யுடியூப் மூலம் மோசடி பாடம்!

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள நிபுணர் குழுவால் திருத்தப்பட்ட இந்த பட்டியல், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பட்டியலை சுகாதார அமைச்சகம் அறிவித்தவுடன், மலிவு மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் குறித்த நிலைக்குழு (SCAMHP) மதிப்பீடு செய்து எந்த மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு தேவை என்பதை மதிப்பீடு செய்யும்.

இதன் முழு நடைமுறை பின்வருமாறு மத்திய சுகாதார அமைச்சகம் விலை கட்டுப்பாட்டிற்கு தகுதியான மருந்துகளின் பட்டியலை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் வரும் மருந்தியல் துறை (Department of Pharmaceuticals) DPCO-ன் அட்டவணை 1-ல் இவற்றை சேர்க்கிறது. பின்னர் மலிவு மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் குறித்த நிலைக்குழு இந்த பட்டியலை ஆய்வு செய்ய மருந்து விலை கட்டுப்பாட்டாளரான தேசிய மருந்து விலை ஆணையத்திற்கு (NPPA) ஆலோசனை வழங்கும்.

Also Read:   அலறித் துடித்த பெண்.. பதற்றத்தில் போலீசை கூப்பிட்ட பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு ஷாக் – வீடியோ!

இறுதியாக தேசிய மருந்து விலை ஆணையம் இந்த அட்டவணையில் இருக்கும் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கிறது. இதன்படி நிதி ஆயோக் உறுப்பினரான சுகாதார டாக்டர் விகே பால் தலைமையிலான SCAMHP-யின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய மருந்து விலை ஆணையத்தால் இறுதி விலை நிர்ணயம் செய்யப்படும். புற்றுநோய், நீரிழிவு, காசநோய் மற்றும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் 18% விலை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: