முகப்பு /செய்தி /இந்தியா / பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு..!

பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த வாலிபர் உயிரிழப்பு..!

பேட்மின்டன் கோர்ட்டில் மயங்கி விழுந்து ஷியாம் யாதவ் மரணம்

பேட்மின்டன் கோர்ட்டில் மயங்கி விழுந்து ஷியாம் யாதவ் மரணம்

38 வயதான ஷியாம் யாதவ் தினமும் மாலை பேட்மின்டன் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

சமீப காலமாகவே நாட்டில் பலரும் டேன்ஸ் ஆடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றன. அப்படி ஒரு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள லால்பேட் பகுதியில் ஜெய்சங்கர் விளையாட்டு அரங்கம் உள்ளது.

இங்கு தினம்தோறும் பேட்மின்டன் விளையாட வரும் 38 வயதான ஷியாம் யாதவ் என்பவர் கடந்த செவ்வாய்கிழமை (பிப். 28) மாலை வழக்கம் போல விளையாட வந்துள்ளார். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த அவர், சுமார் 7.30 மணி அளவில் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். இதைப் பார்த்து பதறிப்போன அங்கிருந்த நபர்கள் அவரை உடனடியாக அருகே உள்ள காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷியாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உயிர் வழியிலேயே பிரிந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இவரது திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. 38 வயதான ஷியாம் மல்காஜ்கிரி பகுதியைச் சேர்ந்தவர். தனது அலுவலக வேலையை முடித்து விட்டு தினமும் இங்கு விளையாட வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நல்ல பிட்டாக இருக்கும் ஷியாம், விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்மின்டர் கோர்ட்டில் இவர் மயங்கி விழுந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றாக இருக்கும் நபர்கள் மயங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அடிக்கடி காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில் மட்டும் கடந்த இரு வாரத்தில் மட்டும் இது போன்ற 5 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

First published:

Tags: Badminton, Death, Heart attack, Heart Failure, Telangana