சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம்: கிராமத்தில் புகுந்து பெண்கள், குழந்தைகளை கடத்திய குண்டர்கள்!

சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம்: கிராமத்தில் புகுந்து பெண்கள், குழந்தைகளை கடத்திய குண்டர்கள்!

இந்த பரபரப்பான கடத்தல் சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பரபரப்பான கடத்தல் சம்பவம் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

  • Share this:
மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் மாநில எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அனல் பறக்கும் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் கிராமம் ஒன்றை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் நாட்டுத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமத்தில் புகுந்து அங்கிருந்த பெண்கள்,  குழந்தைகள் என 38 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தல் பின்னணி என்ன?

மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கலசியா கிராமம். இங்கு வசிப்பவர்களின் இருசக்கர வாகனங்களை அருகாமையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்வார் மாவட்டத்தின் பமெந்தெவ்ரியா - ஹஜ்தியா கிராம எல்லையில் டெண்ட்கள் அமைத்து வசிக்கும் பழங்குடியினர் திருடிச் செல்வதாகக் கலசியா கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்தவரின்
இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக கோவத்தில் 100க்கும் மேற்பட்ட கலசியா
கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு
பேருந்து, இருசக்கர வாகனங்கள், கார் என பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

அங்கு ஆண்கள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் என 38
பேரை பேருந்தில் கத்தி முனையில் கடத்தி மத்திய பிரதேசத்தில்
உள்ள தங்களின் கிராமத்திற்கு புறப்பட்டனர்.

இதனிடையே தகவலறிந்த காவல்துறையினர் 100க்கும்
மேற்பட்டவர்களை துரத்திச் சென்று பேருந்தி இருந்த பெண்கள்,
குழந்தைகளை மீட்டனர். சம்பவத்திற்கு காரணமான பிறர் தப்பிய நிலையில் காரில் சென்ற 6 பேரை மட்டும் காவல் துறையினர் கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், வாள், கத்திகள், லத்திகள், கூர்மையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் உயர் அதிகாரிகள் கூறினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இது அக்கிராமத்தின் முந்தைய பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த பரபரப்பான கடத்தல் சம்பவம் சினிமா காட்சிகளை
மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
Published by:Arun
First published: