Home /News /national /

உத்தவ் தாக்ரே அரசுக்கான ஆதரவு வாபஸ் - 38 அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவிப்பு

உத்தவ் தாக்ரே அரசுக்கான ஆதரவு வாபஸ் - 38 அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவிப்பு

அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே

அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே

அதேவேளை, ஆதரவு விலக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏகள் 38 பேர் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாகக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அம்மாநில துணை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தொடங்கினார். துணை சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வீடியோ கான்ஃப்ரன்சிங் வாயிலாக ஆஜராகி வாதாடி வருகிறார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே அளித்த மனுவில் மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை இவர்கள் விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஆதரவு விலக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அதிருப்தி அமைச்சர்களின் 9 பேரின் இலாக்காக்களை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அவர்களிடம் இருந்து பறித்துள்ளார். மேலும், சிவசேனா சட்டப் போராட்டம் மற்றும் தெரு போராட்டம் இரண்டுக்கும் தயாராக உள்ளது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் கிராமத்திற்கே தற்போது தான் மின்சார வசதி

    மேலும், அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் உடனடியாக மகாராஷ்டிரா திரும்பி தங்களின் அலுவல் பணிகளை தொடர வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது வழிகாட்டுதலை அனைவரும் கூர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Uddhav Thackeray

    அடுத்த செய்தி