டெல்லியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: மலைப் பிரதேசம் போல் மாறிய நொய்டா!

ஆலங்கட்டி மழை பெய்ததால், வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லிக்கு வரவேண்டிய சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

டெல்லியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: மலைப் பிரதேசம் போல் மாறிய நொய்டா!
சாலையில் நிறைந்திருக்கும் ஆழங்கட்டிகள்
  • News18
  • Last Updated: February 8, 2019, 8:07 AM IST
  • Share this:
டெல்லியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனிடையே, அதிக பனிப்பொழிவு காரணமாக நொய்டா மலைப் பிரதேசம் போல் மாறியுள்ளது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது வழக்கத்திற்கு மாறாக தட்பவெப்பநிலை மாற்றமடைந்துள்ளதுடன், பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 15 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை இருந்த போது பலத்த காற்று வீசியுள்ளது.

இதையடுத்து, நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால், வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லிக்கு வரவேண்டிய சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.


சுமார் இரண்டு மணி நேரம் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், வீடுகள், சாலைகள் முழுவதிலும் பனிக்கட்டிகளாக குவிந்துள்ளன. அத்துடன், வீட்டின் பூந்தொட்டிகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடந்தன.

இதற்கிடையில், டெல்லியை ஒட்டிய உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பனிப்பொழிவின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது. இதனால், வீட்டு மேற்கூரைகள், வாகனங்கள் மற்றும் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன.

மேலும், நொய்டா முழுவதும் வெண்போர்வை போர்த்தியது போல் காணும் இடமெல்லாம் பனி படர்ந்துள்ளது. இதால், இது நொய்டாவா? மலைப் பிரதேசமா? என சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பொதுமக்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்டெல்லி, நொய்டாவிலேயே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நிலையில், மலைப் பிரதேசமான இமாச்சலபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளள், ஐரோப்பிய நாடு போல் பனிப்பிரதேசமாக காட்சியளிக்கிறது.

Also see...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்