#ModiSpeaksToNews18 | சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு காஷ்மீர் நலனுக்கு எதிரானது - பிரதமர் மோடி

மொத்த காஷ்மிரில் இரண்டு மற்றும் ஒரு மாவட்டத்தின் பாதி பகுதியில் மட்டுமே இந்த பிரச்னையை காண்கிறோம். இந்த நிலை மாறும், அதற்கு ஊடகங்கள் மாற வேண்டும்.

#ModiSpeaksToNews18 | சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு காஷ்மீர் நலனுக்கு எதிரானது - பிரதமர் மோடி
மோடி
  • News18
  • Last Updated: April 9, 2019, 9:47 PM IST
  • Share this:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் காஷ்மீர் நலனுக்கு எதிரானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், “காஷ்மீர் பிரச்னை மிகப் பழையது. ஒரு காலத்தில் சர்தார் வல்லபாய் படேல் அணுகிய போது இருந்த சூழ்நிலை தற்போது இல்லை. அவர் இதற்கு தீர்வை கண்டறிந்தார். ஆனால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த பிரச்னையை அப்படியே விட்டுவிட்டார்.

அப்போதிலிருந்து இது முரண்பாடாக மாறியது. அதனால் ஆயிரக்கணக்கான நமது வீரர்கள் உயிரிழந்தனர். புறக்கணிக்கப்பட்டதாக காஷ்மீர் உணரும் வகையிலான எதையும் இந்தியா செய்யவில்லை. ஆனால் காஷ்மீர் பிரச்சனையை பிரிந்து கொண்டு அணுகுகிறாம்.


இந்த விவகாரத்தை அணுகுவதில் முந்தைய அரசுகள் தோல்வியடைந்தன. இரண்டாவதாக லடாக்கிலோ, ஜம்முவிலோ எந்த பிரச்னையும் இல்லை. ஸ்ரீநகர் எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே இந்த பிரச்னை உள்ளது.

மொத்த காஷ்மிரில் இரண்டு மற்றும் ஒரு மாவட்டத்தின் பாதி பகுதியில் மட்டுமே இந்த பிரச்னையை காண்கிறோம். இந்த நிலை மாறும், அதற்கு ஊடகங்கள் மாற வேண்டும். இங்குள்ள வளர்ச்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும். உதாரணமாக விளையாட்டு மற்றும் போட்டித் தேர்வுகளில் முன்னேற்றத்தை நாம் ஏற்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய பல்கலைக்கழகங்களிலும் இன்று காஷ்மீர் மாணவர்கள் உள்ளனர். இதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 75% வரை வாக்குகள் பதிவாகின. ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தற்போது அவர்கள் வாய்ப்புகள் கிடைத்து செயல்பட தொடங்கியுள்ளனர். இதேபோல காஷ்மீரில் முதலீடுகளும், வேலை வாய்ப்புளும் தேவைப்படுகின்றன.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் 35 ஏவும், 370ம் வளர்ச்சிக்கும் வேலைவாய்புக்கும் தடையாக உள்ளன. இதனால் அங்கு முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை.

நாம் அங்கு IIMS-களை உருவாக்கலாம். ஆனால் பேராசிரியர்கள் செல்ல மறுக்கின்றனர். அவர்களுக்கு வீடு கிடைப்பதில் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இந்த பிரிவுகள் காஷ்மீர் நலனுக்கு எதிராக உள்ளன. ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் இன்றைய காஷ்மீருக்கு தடையாக உள்ளன. அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading