தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான சந்திரசேகர். இவருக்கு அன்மையில் 19 வயதான ஷியாமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மரணம் அடைந்துள்ளார். தனது கணவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக மனைவி ஷியாமளா கூறிய நிலையில், மரணம் தொடர்பாக சந்திரசேகரின் தாயாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சந்திரசேகர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. ஷியாமளாவுக்கு 20 வயதான சிவகுமார் என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காதலில் இருந்துள்ளார். ஆனால், பெரியவர்களின் அழுத்தம் காரணமாக சந்திரசேகரை மார்ச் 23ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்னும் சிவாவுடன் ஷியாமளாவுக்கு தொடர்பு இருந்த நிலையில், இருவரும் சந்திரசேகரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஏப்ரல் 19 தேதி ஷியாமளா கணவருக்கு உணவில் எலி மருந்தை கலந்து தந்துள்ளார். ஆனால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று அவர் குணமாகியுள்ளார். இதையடுத்து, சந்திரசேகரை கொலை செய்ய அடுத்த திட்டம் தீட்டிய ஷியாமளா, அவரை கோயிலுக்கு போகலாம் என அழைத்து சென்றுள்ளார்.
வழியில் ஷியாமளாவின் காதலன் சிவா மற்றும் அவரது தோழர்கள் சேர்ந்து சந்திரசேகரின் காரை மறித்துள்ளனர். அப்போது, சந்திரசேகரை அவர்கள் ஷியாமளாவின் உதவியோடு அடித்து கொலை செய்த நிலையில், தனது கணவர் நெஞ்சு வலி வந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க:
ஃபுல் அடிச்சும் போதையில்லை - மதுபான கடை மீது மதுப்பிரியர் அமைச்சரிடம் புகார்
இதையடுத்து, ஷியாமளா, அவரது காதலன் சிவா, மற்றும் அவர்களின் தோழர்கள் ஆறு பேரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.