கள்ளச்சாராயம் குடித்து 34 பேர் உயிரிழப்பு!

news18
Updated: February 9, 2019, 5:04 PM IST
கள்ளச்சாராயம் குடித்து 34 பேர் உயிரிழப்பு!
மாதிரிப் படம்
news18
Updated: February 9, 2019, 5:04 PM IST
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 34 பேர் மரணமடைந்துள்ளனர்.

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் 18 பேரும், உத்தராகண்டில் 16 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன உள்ளூர் அதிகாரிக 13 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626