ஹோம் /நியூஸ் /இந்தியா /

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் மரணம் - 11 மாத கைக் குழந்தை உள்ள நிலையில் சோகம்

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட இளம்பெண் மரணம் - 11 மாத கைக் குழந்தை உள்ள நிலையில் சோகம்

 பெண் மரணம்

பெண் மரணம்

முதல் குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகாத நிலையில், உரிய இடைவெளி இல்லாமல் அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள ப்ரீத்திக்கு விருப்பம் இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள நியூ மிகோ லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் ப்ரீத்தி குஷ்வாஹா. இவர் இ காமர்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 33 வயதான ப்ரீத்தி, தேவபிரத் என்ற மென்பொருள் பொறியாளரை மணம் முடித்துள்ளார். இருவருக்கும் 11 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், ப்ரீத்தி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். முதல் குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகாத நிலையில், உரிய இடைவெளி இல்லாமல் அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்ள ப்ரீத்திக்கு விருப்பம் இல்லை. எனவே, கருக்கலைப்பு என்று முடிவுக்கு ப்ரீத்தி வந்துள்ளார். தனது கணவர் தேவபிரத்திடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி தருமாறு ப்ரீத்தி கேட்டுள்ளார். எதற்கும் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என கணவர் கூறி ப்ரீத்தி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தம்பதி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணவரை கேட்காமல் அவர் வெளியே சென்ற நேரம் பார்த்து கருக்கலைப்பு மாத்திரையை ப்ரீத்தி உட்கொண்டுள்ளார். ஆனால், மாத்திரை சாப்பிட்ட உடன் ப்ரீத்திக்கு கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிலேயே ப்ரீத்தி மயங்கி விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: கிட்னியை விற்க முயன்று 16 லட்சத்தை கோட்டை விட்ட மாணவி..!

மயங்கி விழுந்த மனைவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் தேவபிரத்தும், ப்ரீத்தியின் சகோதரரும் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ப்ரீத்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு மாத்திரை உண்டதால் தான் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கர்நாடக காவல்துறையினர் இது இயற்கைக்கு மாறான மரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Abortion, Karnataka