• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா!

ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா!

Karnataka

Karnataka

இந்தப் பள்ளியில் பயின்று வந்த சில மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் உடனடியாக அங்கு பயின்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  • Share this:
ஒரே பள்ளியில் படித்து வந்த 33 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியினை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்சில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை பரவலும் தீவிரமாக இருந்ததால் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தன. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு இன்னமும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

Also read: மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை அசைக்க முடியாது – பிரசாந்த் கிஷோர் ஆருடம்

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த அக்டோபர் 25ம் தேதி தான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 6 அன்றும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 அன்றும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் படித்து வந்த 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் மடிகேரியில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியில் படித்து வந்த 33 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Also read: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் தேசதுரோக வழக்கில் கைது!

இந்தப் பள்ளியில் பயின்று வந்த சில மாணவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் உடனடியாக அங்கு பயின்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தமாக 287 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பெற்றோர்களை அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்தார். மேலும் அந்த பள்ளி தற்போது கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: