காஷ்மீரில் கோர விபத்து - பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு

news18
Updated: July 1, 2019, 11:12 AM IST
காஷ்மீரில் கோர விபத்து - பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 33 பேர் உயிரிழப்பு
விபத்து நடந்த இடம்
news18
Updated: July 1, 2019, 11:12 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் பகுதியில் இன்று காலை பேருந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது.

கிஸ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் உருண்டு சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...